மன்னார் நகரசபை சிறுவர் பூங்கா புணர் நிர்மாண பணிகள் ஆரம்பம்
மன்னார் நகர் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை மீள் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை மன்னார் நகரசபை செயலாளரின் வழிகாட்டலுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நீண்ட காலங்களாக புணரமைக்கப்பாடமல் பூங்கா காணப்பட்ட நிலையில் நகரசபையின் 2024 ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பூங்காவானது புனரமைப்பு செய்யப்படவுள்ளது
15 இலட்சம் ரூபா செலவில் புணர் நிர்மாணம்
குறிப்பாக சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளடங்களாக,நீர்,மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு செயற்பாடுகளை செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படதன் அடிப்படையில் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அதில் முதல் கட்டமாக 15 இலட்சம் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு சிறுவர் பூங்காவானது இம்மாத இறுதியில் பாவனைக்கு கையளிக்கப்படவள்ளமை குறிப்பிடத்தக்கது
பசி இல்லா தேசம் மன்னார் கிளை அங்குரார்பணம்
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக பல்வேறு சமூக பணிகளை செயற்படுத்தி வரும் பசியில்லா தேசம் அமைப்பின் மன்னார் மாவட்டத்துக்கான பிரதான கிளை பசி இல்லா தேசம் அமைப்பின் இணைப்பாளர் சதீஸ் தலைமையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கணேகஸ்வரன் மன்னார் நகர் பிரதேச செயளாலர் ம.பிரதீப் உள்ளடங்களாக விருந்தினர்கள் இணைந்து பிரதான கிளையை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்
அதனை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட 10 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக விருந்தினர்களால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் அரச அதிபர்,பிரதேச செயலாலர்,அரச அதிகாரிகள்,மதத்தலைவர்கள்,மகளீர் அமைப்பின் பிரதி நிதிகள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்
பசியில்லா தேசம் அமைப்பானது மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக இரத்த தானமுகாம்கள்,நிவரண பொருட்கள்,வாழ்வாதார உதவிகளை வறிய குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
COMMENTS